‘விவேகம்’ படத்துக்கு சிக்கல் வருமோ?..கவலையில் படக்குழுவினர்...

ஆளுங்கட்சி சசிகலாவால் அஜீத் நடித்து வரும் ‘விவேகம்’ படத்துக்கு சிக்கல் வருமோ என்ற கவலையில் படக்குழுவினர் ஆழ்ந்துள்ளனர்.சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விவேகம்’. படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தினை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இப்படத்தின் வெளியீடு உரிமையை ஏற்கனவே சசிகலாவின் ஜாஸ் நிறுவனம் கைபற்றிவிட்டதாக கூறப்படுகிறது. ஜாஸ் நிறுவனம் தான் ‘வேதாளம்’ படத்தினை வாங்கி வெளியிட்டது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இப்படம் துவங்கியவுடனேயே இப்படத்தின் உரிமையை ஜாஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது உருவாகியிருக்கும் அரசியில் சூழ்நிலையினால், சசிகலாவின் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைபாற்றியிருக்கும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டிற்க்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ? என்ற கவலையில் அஜீத் தரப்பு மற்றும் படக்குழுவினர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது... Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
