Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விவசாயியாக மாறியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி..!

On September 22, 2018
vj
Share
மணிரத்தினம் இயக்கத்தின் விஜய் சேதுபதி நடித்திருக்கும் செக்க சிவந்த வானம் இம்மாதம் இறுதியில் வெளிவர உள்ளது. இந்நிலையில், அவர் நடித்து வரும் மற்றொரு படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் சீதக்காதி திரைப்படத்தில் வயதான விவசாயியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பி, விஜய் சேதுபதி முதியவராக நடித்து வருகிறார். அவரின் தோற்றம் லேசாக இந்தியன் தாத்தா போல இருந்தாலும், இந்த கதையில் நிச்சயம் ஏதோ ஒரு பிரமிக்கக் கூடிய விஷயம் இருக்கும் என்பதி தெளிவாக வெளிபட்டது. அதன் படி விஜய் சேதுபதி வயதான விவசாயியாகவும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் தோற்றம் அமையும் மேக் அப் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இதை தொடர்ந்து, இந்த படத்தின் வெளியீட்டிற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.