Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விரைவில் திரைக்கு வரும் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் " 96 "..!

On September 1, 2018
cg
Share

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் 96 என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார் மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்ல என்றார் இயக்குனர் C.பிரேம்குமார்.

படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் S.S.லலித்குமார் வெளியிடுகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.