Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விருப்பமனுத் தாக்கலில் சாதி மற்றும் மதத்தை குறிப்பிடத்தேவையில்லை - மக்கள் நீதி மய்யம்..!

On March 2, 2019
Kamalhassan
Share

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த விருப்பமனுக்களில் வேட்பாளர்களின் சாதி குறிப்பிடக் கூடாது என ம.நீ.ம. தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களுக்கான விருப்பமனுக்களைத் விநியோகித்து வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட தங்களுக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரியாவிட்டாலும் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்களை தங்கள் கட்சியினருக்கு விநியோகித்து வருகின்றனர்.

கமலின் மக்கள் நீதி மய்யம் இதில் ஒருபடி முன்னேப் போய் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவரும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. இதனால் மக்கள் நீதி மய்யத்தில் விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இப்போது விருப்பமனு விவகாரத்தில் இன்னொருப் புதுமையை செய்துள்ளார் கமல். அதுவென்னவென்றால் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்பமனுக்களில் தங்கள் சாதி மற்றும் மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் சூழலில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.