Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விபத்தில் இறந்த தோழி: தற்கொலை செய்த தோழன்- ஈசிஆர் சாலையில் அதிர்ச்சி.

On October 5, 2024
eea45258-b6df-45c4-97f4-2e26663e3cb0
Share

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் சபரீனா(20).‌ இவர் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கமலம்பூண்டி பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரின் மகன் யோகேஸ்வரன் (20) என்பவருடன் சபரீனா நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் யோகேஸ்வரனின் இருசக்கர வாகனத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மகாபலிபுரத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் சென்று விட்டு இருவரும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருக்கழுக்குன்றம் வந்துள்ளனர். அப்போது மாமல்லபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , பூஞ்சேரி சந்திப்பு அருகே , மதியம் 12.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரத்தில் இருந்து, திருக்கழுக்குன்றம் நோக்கி பூஞ்சேரி சந்திப்பை கடக்க முயன்ற போது, அவருக்கு பின்னால் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த பாண்டிச்சேரி அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் மோதியதில், இருசக்கர வாகனம் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து வந்த சபரீனா சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த சபரீனா ரத்த வெள்ளத்தில், துடி துடித்தார். இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு, பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று பரிசோதனை செய்ததில், சபரீனா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இத்தகவலை அறிந்த அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்த யோகேஸ்வரன் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதுள்ளார்

தொடர்ந்து அழுது கொண்டே பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து, கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி மார்க்கமாக சென்ற பாண்டிச்சேரி அரசு பேருந்தின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.‌ தற்கொலை செய்து கொண்ட யோகேஸ்வரன் மற்றும் விபத்தில் உயிரிழந்த சபரீனா ஆகிய இருவரின் உடலை மீட்டு மாமல்லபுரம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து மற்றும் தற்கொலை தொடர்பாக தனித்தனி வழக்குகள் பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரீனா மற்றும் யோகேஸ்வரன் ஆகிய இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மாமல்லபுரத்திற்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. தான் அழைத்து வந்த, தோழி சபரீனா உயிரிழந்தால் சோகத்திலும் மற்றும் இதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் யோகேஸ்வரன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.