Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வினோத் இயக்கத்தில் "தல 59" - பூஜை இன்று தொடங்கியது..!

On December 14, 2018
9cd7f8764205bb428c37ea3429c40e5f
Share
விஸ்வாசம் திரைப்படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்க இருந்த 59வது திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், தனது 59வது திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி இருந்தது. தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை படங்களின் இயக்குனர் ஹெச். வினோத் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடிக்க இருந்த 59வது திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. பூஜையின் போது சாமி படங்களுடன், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் படமும் இடம் பெற்று இருந்தஅந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. கூடுதலாக இந்த திரைப்படத்தின் மூலம், நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் தகவலும் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.