
விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது சமந்தாவின் யு-டர்ன்..!

2016 - ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியானது. இப்படத்தை லூசியா பட இயக்குநர் பவன்குமார் இயக்கியிருந்தார்.
ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை. கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உருவாகியுள்ளது. அதிக வசூலை குவித்த இந்தப் படத்தை இந்தியிலும் இயக்க உள்ளார் இயக்குநர் பவன் குமார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக யு-டர்ன் படத்தின் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Postமீண்டும் ஹீரோவாகும் யோகி பாபு..!
