Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விதார்த் - உதயா இணையும் அக்னி நட்சத்திரம்...

On August 31, 2019
Vidarth - Udhaya
Share

உதயா – விதார்த் நடிக்கும் 'அக்னி நட்சத்திரம்' கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ் மணிகண்டன் சிவதாஸ் - ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற 'அக்னி நட்சத்திரம்' மாபெரும் வெற்றி பயமாக அமைந்தது, அந்த படத்தை அப்போதைய மக்கள் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா - விதார்த் நடிப்பில், மீண்டும் அதே 'அக்னி நட்சத்திரம், என்ற தலைப்பில் ஒரு புதிய திரைப்படம் முற்றிலும் புதிய கதைகளத்துடன் உருவாகிறது.

இப்படத்தின் மூலம் சரண் என்னும் புதுமுக இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

எல் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பினை கையாள்கிறார். பா விஜய் பாடல் வரிகளில், ஒய் ஆர் பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தினை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரண்.

வரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.