விஜய் விஷ்வாவுக்கு கைகொடுத்த விஜய் சேதுபதியும் சசிகுமாரும்...

தயாரிப்பாளர் P செந்தில்நாதன், KV Media சார்பில் வழங்க, இயக்குநர் TR விஜயன் இயக்கத்தில், விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள “பிரம்ம முகூர்த்தம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர்.
காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் களேபரங்களும், அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்களும், பரபர திரைக்கதையில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது இப்படம்.
இளம் நாயகன் விஜய் விஷ்வா நாயகனாக நடிக்க, அபர்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், C.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, TSR, கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு ,சென்னை, திருவள்ளூர், ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
KV Media சார்பில் P செந்தில்நாதன் இப்படத்தை தயாரிக்க, கதை மற்றும் திரைக்கதை எழுதி TR விஜயன் இயக்கியுள்ளார். இப்படத்தின் வசனங்களை ஜாபர் எழுத, சினேகன், C. பாலமுருகன், A.P. ராஜா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். படத்திற்கான இசையை ஶ்ரீ சாஸ்தா அமைக்க, EJ.நவ்ஷாத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிரவீன் குமார் இப்படத்தின் படதொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
