Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை'- எஸ்.ஏ.சந்திரசேகர் ..

On March 25, 2017
Vijay (1)
Share
Vijay (1) ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் பேசினார். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் படம் வெளியான அன்று திருட்டு சி.டி.யை விற்க முடியாது. அந்தளவுக்கு அரசு சினிமாத்துறைக்கு உதவுகிறது. தமிழகத்தில் படம் வெளியான முதல் காட்சி முடிந்த உடனேயே திருட்டு சி.டி. வந்து விடுகிறது. எனவே திருட்டு சி.டி.யை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒருவரே இருந்து நிர்வாகம் செய்வது சரியாக இருக்காது. நடிகர் கால்ஷீட் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டால் அவர் நடிகரை ஆதரிப்பாரா? தயாரிப்பாளருக்கு ஆதரவாக பேசுவாரா?.இதற்கு விடை அவரே அறிவார். இவாறாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறினார்...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.