விஜய்.. நீங்க ஒரு டுபாக்கூர் தம்பி! - திண்டுக்கல் ஐ லியோனி.

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்கேநகர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது,முதல் மாநாட்டில் ஓடி வந்த விஜயை நோக்கி துண்டுகளை வீசிய நிலையில் அதை அவர் கழுத்தில் எடுத்து போட்டுக் கொண்டார். பின்னர் அதே துண்டுகளை அவர் கூட்டத்தை நோக்கி வீசிய நிலையில் சில துண்டுகள் காலில் மிதிபட்டது. இதைக்கூட கவனிக்கவில்லை. இதெல்லாம் ஒரு மாநாடா. அந்த டுபாக்கூர் பொம்மை கோட்டைக்குள் போவதற்கு 800 மீட்டர் ஓட வேண்டி இருந்தது. அப்படியெனில் சார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கு இன்னும் எத்தனை தூரம் ஓட வேண்டும் ப்ரோ என்றார்.
திமுக என்ற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21 வது பிளேடு தான் நீங்கள். இதற்கு முன்பு 20 பிளேடுகள் வந்த நிலையில் அதில் 4 பிளேடுகள் துருப்பிடித்து கிடக்கிறது. சில பிளேடுகள் எதற்கு வந்தோம் என்று கூட தெரியாமல் அனாதையாக கிடக்கிறது. திமுக என்ற ஆலமரத்தை அறுக்க வந்த 21 வது பிளேடு தான் தம்பி விஜய். எந்த கொம்பனாலும் திமுக என்று ஆலமரத்தை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று கூறினார். அதோடு உலகமே பாராட்டக்கூடிய இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றும் கூறினார்.
மேலும் இதற்கு முன்னதாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் விஜயை டுபாக்கூர் என்று விமர்சித்த நிலையில் தற்போதும் அவர் டுபாக்கூர் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் விஜய்யை கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
