Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கோடியில் ஒருவன்

On March 10, 2021
K-07253
Share

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T.D ராஜா தயாரிக்கும் படம் "கோடியில் ஒருவன்". இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, ஒளிப்பதிவினை N S உதயகுமார் மேற்கொள்கிறார் .

இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி படம் பற்றி கூறியதாவது,

"கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு திறமையான நடிகை கூட. நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது" என்று கூறினார்.

படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆத்மீகா கூறுகையில்,

"இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். இவர் ஒரு ரியல் லைஃப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்". இவ்வாறு அவர் கூறினார்.

படத்தை பற்றி இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பேசும்போது,

"கோடியில் ஒருவன் படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார். இந்த படத்தில் அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், சிக்கலைகளையும் மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படம்" என்று தெரிவித்தார்.

Dr . தனஞ்செயன் கூறியதாவது,

"கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.. ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர். இந்த படத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொள்கிறார்.
முதன்முதலாக எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம். விஜய் ஆண்டனி கடுமையான உழைப்பாளி. படப்பிடிப்பு நடக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளை கவனிப்பார்" என்று தெரிவித்தார் .

'இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்' வழங்க Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். இணை தயாரிப்பு - கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B பிரதீப், பன்காஜ் போஹ்ரா , விக்ரம் குமார் .

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.