விஜய்யின் முதல் மாநில மாநாடு : அனுமதி கிடைக்குமா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாக அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம், தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறார் த.வெ.க கட்சித் தலைவர் விஜய்.
இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கரவாண்டியில் நடக்க உள்ளது என்றும், இந்த மாநாடு வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், விக்கரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு அனுமதி கோரி ஏ.டி.எஸ்.பி திருமாலிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
