Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்..!

On September 8, 2018
WhatsApp Image 2018-09-06 at 11.39.01 AM
Share

தமிழ்த் திரையுலகின் பாரம்பரியமான திரைப்பட நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறது. இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் விஜய் சந்தர் இயக்குகிறார்..!

'எங்க வீட்டு பிள்ளை', 'உழைப்பாளி', 'நம்மவர்', 'தாமிரபரணி', 'படிக்காதவன்', 'வேங்கை', 'வீரம்', 'பைரவா' உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனம் பெரியவர் நாகி ரெட்டியாரின் விஜயா புரொடெக்சன்ஸ்

இந்த நிறுவனம் கடைசியாக விஜய்யின் நடிப்பில் 'பைரவா' படத்தைத் தயாரித்திருந்தது.இப்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் தங்களது அடுத்தப் படத்தைத் துவக்குகின்றனர். இத்திரைப்படம் 2019-ம் ஆண்டு துவக்கத்தில் ஆரம்பமாகவுள்ளது. 'வாலு' படத்தின் இயக்குநரான இயக்குநர் விஜய் சந்தர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

ஒளிப்பதிவு - R.வேல்ராஜ், படத் தொகுப்பு - பிரவீன் K.L, சண்டை பயிற்சி -அனல் அரசு, கலை இயக்குனர் - பிரபாகர், தயாரிப்பு மேற்பார்வை - ரவிச்சந்திரன், குமரன். மக்கள் தொடர்பு - ரியாஸ் கே.அஹமது.

தற்போது படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.