Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விசிக- கட்சி நிர்வாகி கைது!

On October 27, 2017
thamizisai
Share
thamizisai மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்து கூறிய தமிழிசையை பற்றி பல நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகிறார்கள். சிலர் அத்துமீறி சென்றதால் தமிழிசை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. vck இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தின்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாஜக-விசிக நடுவே மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு நிலைமையை சரி செய்தனர். இந்த நிலையில், தமிழிசை பற்றி பேஸ்புக்கில் அவதூறாக கருத்துக்களை தெரிவித்ததாக கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வினோத்குமார் மீது புகார் எழுந்தது. இதை விசாரித்த காவல்துறையினர் புகாரில் உண்மை இருப்பதாக தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.