விக்ரம் பிறந்தநாளில் வெளியாகும் "இருமுகன்" டீசர்:

ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.
நடிகர் விகரமின் பிறந்தநாளான ஏப்ரல் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.
விக்ரம் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு ஒரு பரிசாக "இருமுகன்" படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிடப்பட்டது. எனிவே ஒரு நிமிடம் ஓடக்கூடிய டீசர் ஒன்றை படக்குழுவினர் தயாரித்துள்ளனர். குறுகியகாலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசரில், இப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் நேர்த்தியாக விவரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த டீசருக்கு ஸ்பெஷல்லாக பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த டீசரின் ஸ்பெஷல் இசையை படத்தின் பின்னணி இசையில் சேர்க்க இயக்குனர் திட்டமிட்டுலதாக சொல்லப்படுகிறது.
விக்ரம் இப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் விக்ரமின் மேக்கப்புக்கு முக்கியதுவக் அளிக்கப்பட்டுள்ளது. விக்ரமின் "ஐ" படத்திற்கு மேக்கப் போட்ட ஹாலிவூட் கலைஞர் தான் இந்த படத்திற்கு மேக்கப் போட்டுள்ளது ஒரு சிறப்பு. "இருமுகன்" படத்தில் விக்ரம் நடித்துள்ள வேடம் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் நடித்ததில்லை என்றும் சொல்லப்படுகிறது.
நயந்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாகநடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வில்லன் யார் என்பதை படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்துள்ளனர். "இருமுகன்" படத்தில் வில்லன் யார், என்ற எதிர்பார்ப்பு ஒன்றும் ரசிகர்களின் கூடுதல் எதிர்பார்ப்பு.
"இருமுகன்" படத்தின் டீசர், விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு பரிசாக இருக்கும்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
