Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'விஐபி 2’ ரிலீஸ்... தியேட்டர்களில் அடுத்தவாரம் திருவிழாதான்!

On August 5, 2017
vip22
Share
vip22 சமீபமாக ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி என தமிழ் சினிமாவுக்கு தொடர்ச்சியாக சோதனைகள்தான். இருந்தபோதும் ‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’ போன்ற படங்கள் பெருத்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு இப்போது கிடைத்திருக்கின்ற பெரிய நம்பிக்கை! இதேபோல் ஆர்வமாக மக்களை, குறிப்பாக இளைஞர்களை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு கொண்டு வந்து நிறுத்தும்’ என்ற நம்பிக்கையை உத்தரவாதமாக தரும்படி உருவாகியிருக்கிறது விஐபி 2! தனுஷ் _ அமலாபால் நடிக்க வேல்ராஜ் இயக்கத்தில் உருவான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம்! சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம்தான் அடுத்த வார ரிலீஸில் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் படம்! dhanush vip முதல் பாகத்தில் நடித்த தனுஷ் _ அமலாபால் ஜோடியே இதிலும் நடித்துள்ளது, நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவில் கஜோல் என்ட்ரீ கொடுத்துள்ளது, மெகா பட்ஜெட், தயாரிப்பாளர் கலைப்புலி தானுவின் ஹை டெக் மார்க்கெட்டிங் எல்லாமுமாக சேர்ந்து சூப்பர் ஸ்டார் படத்துக்குண்டான எதிர்பார்ப்பைத ’விஐபி 2’ படத்துக்கும் தந்துள்ளது! ஆகவே, அடுத்த வாரம் தியேட்டர்களில் திருவிழாக் கோலம்தான்! ஓப்பனிங் பிரமாண்டமாக இருக்கும் என அடித்துச் சொல்லலாம்!⁠⁠⁠⁠

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.