Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வரதட்சணை வழக்கில் இனி அதிரடி கைது கிடையாது!

On July 28, 2017
manram
Share
manram இந்தியாவில் திருமண பந்தம் உருவாக்கப்படும் போது, வரதட்சணையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. இதன் கொடுமை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதிலிருந்து பெண்களை காப்பாற்ற வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்கும் போது, உடனடியாக கணவர்களை கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. varathatsanai வரதட்சணை தொடர்பான வழக்குகளில் யாரையும் உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதற்காக உரிய விசாரணை நடத்தப்பட்டு, காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப நல கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதன் முலம் வழக்கை விசாரித்து அறிக்கை பெறப்பட வேண்டும். அறிக்கையின் உண்மைத் தன்மை பொருத்து சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.