Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வயநாட்டில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் "ராகுல் காந்தி"..!

On April 4, 2019
ra10
Share
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மற்றொரு தொகுதி என்ற கேள்விக்குப் பல தொகுதிகள் யூகங்களாக சொல்லப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் கூட அவர் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக கேரள மாநிலம் வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று இரவு கேரளா வந்த் அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் இருந்தார். கேரளாவில் மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.