வயநாடு நிலச்சரிவை இன்று பார்வையிட வருகிறார் பிரதமர் மோடி

நிலச்சரிவு ஏற்பட்ட கேரளா மாநிலம் வயநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்றபடி ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, பின்னர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். கேரள அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இருக்கும் நிலையில், மோடியின் இந்த பயணத்திற்கு பிறகு இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளவில் உள்ள வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சூரல் மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் உடைமைகளை இழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி 413 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சுமார் 130 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த தேசத்தையும் கேரள நிலச்சரிவு சம்பவம் அதிரவைத்தது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். கேரளாவின் வயநாட்டிற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கசிகள் முன்வைத்து வந்தன. இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு செல்கிறார்.
நிலச்சரிவில் சிக்கி 413 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சுமார் 130 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த தேசத்தையும் கேரள நிலச்சரிவு சம்பவம் அதிரவைத்தது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். கேரளாவின் வயநாட்டிற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கசிகள் முன்வைத்து வந்தன. இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு செல்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
