வசூல் வேட்டையில் விஜய் தேவரகொண்டா..!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இருக்கும் தெலுங்கு திரைப்படம் கீதா கோவிந்தம். ஒரு சில வாரங்களாக தமிழக இளசுகளின் வாட்சப் ஸ்டேடஸ் களை ஆக்கிரமித்து இருந்த 'இன்கிம் இன்கிம்' பாடல் இடம் பெற்றிருக்கும் திரைப்படம் தான் இது.
இப்படி தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் விளம்பரம் பிரேமம் படத்தினை தொடர்ந்து ஒரு வேற்று மொழி திரைப்படத்திற்கு சென்னையில் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது.
இப்படம் வெளியாகி ஓடிய 12 நாட்களில் மட்டும் சென்னையில் சுமார் ஒரு கோடியே ஒன்பது லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது. இந்த தொகையானது பிற தமிழ் படங்களின் வசூலுக்கு நிகராக இல்லாவிட்டாலும், பிற மொழி படங்களின் வழக்கமான வசூலை விட மிக மிக அதிகம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
