வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்!

இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து. வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
கடன்களை திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் செய்யக் கூடாது. வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி சங்கங்களின் ஒருங் கிணைந்த கூட்டமைப்பு அறிவித்தது.
இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி ஊழியர் சங்கத்தினர் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 22-ம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
