Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லோக் சபா தேர்தல் : திமுகவினருடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை..!

On December 24, 2018
stalin
Share

திமுக தலைவர் ஸ்டாலின் 2019 லோக் சபா தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் எல்லாமும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. பாஜக ஏற்கனவே பீகார் கூட்டணிக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.

எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது திமுகவும் இதற்காக களத்தில் இறங்கி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் 2019 லோக் சபா தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணி குறித்தும், தேர்தல் திட்டங்கள் குறித்தும், தமிழகத்தில் அளிக்க வேண்டிய வாக்குறுதிகள் பற்றியும் இதில் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் மற்ற முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர். திமுகவில் புதிதாக இணைந்த செந்தில் பாலாஜியும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்.

அதேபோல் தமிழகத்தில் நடக்க உள்ள 20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் இதில் பேச இருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.