Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரூ.50,000க்கும் மேல் டெபாசிட்டா ? வங்கிகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு!

On October 23, 2017
1485328648
Share
1485328648  , ரூ.50,000க்கும் மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இனி வங்கியில் ரூ.50,000க்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்து அரசாணை ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பங்குச்சந்தை முகவர்கள், சீட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும்.  , புதிதாக வங்கி கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50,000க்கும் மேற்பட்ட பணப்பரிமாற்றத்திற்கும் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள ஆவணங்கள் கட்டாயமாகும். வெளிநாட்டு கரண்சிகள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிற்கு மேல் ரொக்க பரிமாற்றம் இருந்தால் ஆதாரை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். மின்னணு முறையில் வெளிநாட்டிற்கு ரூ.5 லட்சத்திற்கும் மேல் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது, பொருட்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது, ரூ.5 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள அசையா சொத்துக்களை வெளிநாட்டில் வாங்குவது ஆகியவற்றிற்கும் இந்த விதிகள் பொருந்தும். இவ்வாறு மத்திய அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.