Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சிம்பு பாடிய பாடல்!..

On March 28, 2017
simbu1
Share
simbu1நடிகர் சிரிஷ் நாயகனாக நடிக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். நடிகர் சிம்பு தற்போது ‘ஏஏஏ’ படத்தில் நடித்து வருகிறார் என்பது யாவரும் அறிந்ததே!. படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் ‘ஏஏஏ’ படத்தில் சிம்புவின் முக்கிய வேடமான அஸ்வின் தாத்தா கதாபாத்திர டீஸர் வெளியாகி இருந்தது. அந்த டீசருக்கு ரசிகர்களும் அமோகமான வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிரிஷ் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் கேட்டுகொண்டதற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை அண்மையில் பாடியுள்ளார். பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு முன்பும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பல படங்களில் சிம்பு பாடியுள்ளார். சிரிஷ் மற்றும் சிம்பு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவருக்காக பாடி இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.