Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரஜினி வெளியிட்ட முப்பரிமாணம் படத்தின் இசை தட்டு....

On February 15, 2017
Mupparimanam Press Meet
Share
Mupparimanam Press Meet சாந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் முப்பரிமாணம். இயக்குநர் பாலாவின் உதவியாளர் அதிரூபன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை சூப்பர்ஸ்டார் கையால் வெளியிட வேண்டும் என விரும்பிய படக்குழு ரஜினியை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறது படத்தின் டிரெய்லரை பார்த்த சூப்பர்ஸ்டார் மீண்டும், மீண்டும் போடச்சொல்லி பார்த்திருக்கிறார். டிரெய்லரை வெகுவாய் ரசித்து பாராட்டியிருக்கிறார் சூப்பர்ஸ்டார். மேலும் இந்தப்படம் சாந்தனுவிற்கு சினிமாவில் பெரிய மாற்றத்தை தரும் என வாழ்த்தி தன் கையால் படத்தின் இசையை வெளியிட்டிருக்கிறார். ரஜினி கையால் இசை வெளியிடப்பட்டதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பாலாவின் உதவியாளராக இருந்த அதிரூபன் மிக வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தனு மூன்று தோற்றங்களில் தன்னை மாற்றிக்கொண்டு இந்தப்படத்தில் நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே சாந்தனு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் தற்போதைய முன்னனி நடிகராக விளங்கும் ஜீ.வீ. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பிரித்யேகமாக திரையிடப்பட்டது. சாந்தனு தன்னுடைய உடலமைப்பு, தோற்றம், ஆடைகள் என அனைத்திலும் சற்றும் வித்யாசமாக காட்சியளிக்கிறார். அவர்டைய ஆக்ஷன் மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ருஷ்டி டாங்கே பள்ளி மாணவி உடையில் தோற்றமளிக்கிறார். படத்தில் வரும் அவருடைய தோற்றம் இளைஞர்கள் மனதில் சற்று இடம் பிடிக்கும். இப்படம் மிகவிரைவில் திரைக்கு வரவிருப்பதில் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.