"ரங்கூன்" இசை வெளியீடு...

ரங்கூன் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியுட்டு விழா கொஞ்சம் நாள் முன்னாடி சென்னையில் நடந்தது. இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கௌதம் கார்த்திக், சனா நடிக்க A.R.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நாயகன் கௌதம் கார்த்திக் தான் இந்த படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்த படத்தில் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குனர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானபர் என்று தன் உரையை முடித்துவைத்தார்.
இதன் பின் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது தான் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளதாகவும். தனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் A.R.முருகதாஸ் என்றும் இவர் உதவி இயக்குனருக்கு நிறைய உதவி செய்வார் என்று பெருமையாக பேசினார் மேலும் கௌதம் கார்த்திக் மிக சிரம பட்டு நடித்துள்ளார். இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும், படத்தின் உண்மைத் தன்மைக்காக கடுமையாக மெனக்கெட்டிருக்கிறோம். படத்தின் தலைப்பு பாடலான யாத்ரீகா என்ற பாடலை நா. முத்துகுமார் எழுதிக் கொடுத்தார் என்று பேசி முடித்தார்.
இதனை தொடர்ந்து A.R.முருகதாஸ் பேசியதாவது இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எனக்காக வந்து என் படங்களுக்கு உதவி செய்பவர். நாயகன் கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகி சனா, சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன். நல்ல படங்களை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் ஏஆர் முருகதாஸ்.
ஃபாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங், நாயகி சனா, படத்தின் இன்னொரு இசையமைப்பாளர் விக்ரம், நடன அமைப்பாளர் சதிஷ், சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சி இறுதியில் A.R.முருகதாஸ் இசை தட்டினை வெளியிட்டார். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
