"மோகன்லால்" பட ஷூட்டிங்கில் இணைந்தார் ஹன்சிகா...

முன்னாடி காலத்துல முன்னனி ஹீரோயின் ஒருவரா ஆக இருந்த ஹன்சிகா அவர்கள் இப்பொழுது நடிக்க படம் வாய்ப்பில்லாமல் மொத்தத்தில் அவர் கையில் மூன்று படம் வைத்துள்ளார்
இந்நிலையில் தமிழில் பிரதேவாவுடன் 'குலேபகாபவலி' மற்றும் தெலுங்கில் கோபிசந்த்துடன் ஜோடியாக 'கௌதம் நந்தா' ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்து விட்டாராம் ஹன்சிகா. இப்போது ஜூன்-1ஆம் தேதி முதல் மலையாளத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் 'வில்லன்' பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ஹன்சிகா.
இது மலையாளத்தில் ஹன்சிகாவுக்கு முதல் படமாகும். அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஷாலுக்கும், மலையாளத்தில் இதுதான் முதல் என்ட்ரி. இதில் ஹன்சிகாவின் கேரக்டரும் விஷாலின் கேரக்டரும் சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்தப்படம் வரும் ஜூலை-21ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
