Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"மோகன்லால்" துவங்கி வைத்த, கேரள அரசின் மரம் நடும் திட்டம்...

On June 5, 2017
laal
Share
laal நம்ம பூமில வெயில் தாக்கம் அதிகமா இருக்குற நிலைமையில் அதன் விளைவாக கேரளா அரசு 1 கோடி மரக்கன்றுகள் நட்டு வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இதனை துவங்கி வைக்கும்படி மலையாள ஸ்டார் மோகன்லாலை கேட்டுக்கொண்டது. எப்போதும் மக்களுக்கு பயன்தரும் அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மோகன்லாலும் இதற்கு ஒப்புகொண்டார். தற்போது இயக்குனர் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'வெளிப்பாடிண்டே புத்தகம்' படத்தில் கல்லூரி துணை முதல்வராக நடிக்கிறார் மோகன்லால். இதன் படப்பிடிப்பு கேரளாவில் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தான் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி முழுவதும் நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்து இதன் படப்பிடிப்பை துவங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது நாடும் முழுதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் அதே கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்துள்ளார் மோகன்லால்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.