Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மொட்ட சிவா கெட்ட சிவா ராகவா லாரன்ஸின் முதல் போலிஸ் படம்....

On February 6, 2017
MSKS
Share
MSKS தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு “மொட்ட சிவா கெட்ட சிவா“ என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 88’வது படமாகும். இப்படத்தை உலகமுழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார். தமிழகம் முழுவதும் வெளியிட இப்படத்தை வேந்தர் மூவிஸிடமிருந்து டாக்டர் சிவபாலன் அவர்கள் வாங்கி ‘சிவபாலன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், நிக்கி கல்ராணி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கோவைசரளா, சதீஸ், ஸ்ரீமன், தம்பிராமய்யா, மனோபாலா, நான்கடவுள் ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ், தேவதர்ஷினி, சுகன்யா, சாம்ஸ், மயில்சாமி, மகாநதி சங்கர், கும்கி அஸ்வின், பாண்டு, மதன்பாப், காக்கா முட்டை ரமேஷ், வைஷ்ணவி திருநங்கை ஆகியோர் நடித்துள்ளனர். அஸ்வத் தோஸ்ராணா, வம்ஷி கிருஷ்ணா, சரண்தீப் ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். மற்றும் ராய்லட்சுமி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இப்படத்திற்கு சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன்.கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். வைரமுத்து, விவேகா, சாய்ரமணி, சொற்கோ, லோகன் ஆகியோர் பாடல்களை எழுத, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். நடனகலையை ராகவாலாரன்ஸ், சிவாலாரன்ஸ், மோகன் கிஷோர் ஆகியோர் அமைத்துள்ளனர். ஸ்டான்ட் கட்சிகளை சிறுத்தை கே.கணேஷும், கலையை செல்வகுமார் அமைத்துள்ளார். படத்திற்கு ஜான் மகேந்திரன் மற்றும் சாய்ரமணி வசனம் எழுத சாய்ரமணி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சாய்ரமணி கூறியதாவது... “இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம்தான் கதை! இரண்டு அதிகாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டதால் அதில் நுழைந்து லாபம் பார்க்க நினைக்கும் சமூக விரோதி ஒருவனின் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பது பரபரப்பான திரைக்கதை! ராகவா லாரன்ஸ் இதுவரை ஏற்றிராத போலீஸ் கதாப்பாத்திரம் அவருக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கும். பக்கா கமர்ஷியல் படம் தான் மொட்ட சிவா கெட்ட சிவா.” என்று சொல்கிறார் இயக்குனர் சாய்ரமணி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.