மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் அஞ்சலி..!

திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இது பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. பல லட்சம் மக்களை இந்த செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு வரிசையாக தலைவர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இப்போதும் தொண்டர்கள், மக்கள் அவரது உடல் இருக்கும் சமாதியை நோக்கி சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக உறுப்பினர்களுடன் சென்று அவர் அஞ்சலி செலுத்தினார்.
மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் லேசாக கண்ணீர் வடித்தார். அதேபோல் திமுக உறுப்பினர்கள் கலைஞர் கலைஞர் என்று கோஷம் எழுப்பினார்கள்.
ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் தற்போது அங்கே கூடி இருக்கிறார்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
