Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மூவரின் வெற்றிக்கூட்டணியில் உருவாகியிருக்கும் பாரிஸ் ஜெயராஜ்

On December 2, 2020
Harris Santhanam
Share

ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் - ஜான்சன் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணி.

"ஏ1" படத்தின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது சந்தானம் - ஜான்சன் கூட்டணி.
"ஏ1" படத்திற்கு தன் இசையால் மெருகேற்றியவர் இப்படத்திலும் இணைந்துள்ளார். வசூல் ரீதியாக அனைவரும் லாபம் ஈட்டிய இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்தது.

காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு "பாரீஸ் ஜெயராஜ்" எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. 'லார்க் ஸ்டியோஸ்' நிறுவனம் சார்பாக கே.குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கும், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார்.

ரோகேஷ் பாடல் வரிகளை எழுத, சாண்டி நடனம் அமைத்துள்ளார். ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி தினேஷ் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். டீஸர், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கொரோனா அச்சுறுத்தலால் இறுக்கமான மனங்களைச் சிரிப்பு மழையில் நனைய வைக்க 2021 ஜனவரியில் வெளியாகவுள்ளது "பாரீஸ் ஜெயராஜ்".

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.