மூன்றாவது முறையாக பைனல் போட்டிக்கு முன்னேறிய பட்னா பைரேட்ஸ் அணி!

புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டியின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னையில் நேற்று இரவு நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், பட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.
ரெய்டு மிஷின் என்றழைக்கப்படும் பிரதீப் நர்வால், 23 புள்ளிகளை எடுத்து பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். இந்த சீசனில் 350 ரெய்டு புள்ளிகளை அவர் எட்டினார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக பைனல் போட்டிக்கு பட்னா பைரேட்ஸ் அணி முன்னேறியுள்ளது. சீசன் 3 மற்றும் 4ன் சாம்பியனான பட்னா பைரேட்ஸ் அணி ஹாட்ரிக் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில் நாளை நடக்கும் பைனலில் பட்னா பைரேட்ஸ் அணியும், குஜராத் பார்சூன்ஜயன்ஸ்ட் அணியும் மோத உள்ளன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
