மூன்றாம் உலகப் போர் இன்னும் கொஞ்ச நாளில் தொடங்க இருக்கிறதா..?- ஜோசியர் சொல்லும் ரகசியம்

உலகப்போர் 3 தொடங்க போவதாக ஜோசியர் ஒருவர் கணித்த நிலையில் தற்போது இன்னொரு ஜோசியர் வங்கதேச புரட்சியை சரியாக கணித்து உள்ளார்.
வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று முன் கூட்டியே அவர் கணித்த நிலையில், அதன்படியே ஆட்சி கவிழ்ந்து உள்ளது. தற்போது அவர் இந்தியாவிற்கும் எச்சரிக்கை ஒன்றைவிடுத்துள்ளார்.
"இந்திய நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்திய ஜோதிடர் குஷால் குமார், ஆகஸ்ட் 4 அல்லது ஆகஸ்ட் 5 ஆம் தேதிகளில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று ஒரு எச்சரிக்கையை சமீபத்தில் வெளியிட்டார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரை முன்னரே கணித்த குமார், புவிசார் அரசியல் நிகழ்வுகளில் ஜோசியம் தொடர்பான கணிப்புகளை வெளியிடுவதில் வல்லவர். இவர்தான் பேரழிவு மோதலை தூண்டும் 3ம் உலகப்போர் வர போவதாக சமீபத்தில் கூறினார்.
மூன்றாம் உலகப் போரின் தொடக்கத் தேதி குறித்து குமார் பல கணிப்புகளைச் செய்துள்ளார், ஆனால் இதுவரை அவை எதுவும் நிறைவேறவில்லை. முன்னதாக, ஜூன் 18, 2024 அன்று போர் தொடங்கும் என்று அவர் அறிவித்தார், ஆனால் அந்த தேதியில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
பின்னர் அவர் ஒரு புதிய தேதியை அறிவித்தார், உலகப் போர் 3 ஜூலை 26 அல்லது ஜூலை 28 இல் தொடங்கும் என்று கணித்தார், ஆனால் மீண்டும், அவரது கணிப்பு தவறானது. இப்போது, இறுதியாக அவர் இந்த முறை சரியாகப் பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வங்கதேச புரட்சி, உலகப்போர் 3 தொடங்க போவதாக கணித்த ஜோசியர் குஷால் கணித்த நிலையில் தற்போது இன்னொரு ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து உள்ளார். வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று முன் கூட்டியே அவர் கணித்த நிலையில், அதன்படியே ஆட்சி கவிழ்ந்து உள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் செய்த போஸ்டில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பற்றிய எனது கணிப்புப்படி ஷேக் ஹசீனா மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் 2024 இல் கவனமாக இருக்க வேண்டும், அவர் படுகொலை முயற்சிகளை எதிர்கொள்ளக்கூடும். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும் என்று கூறி இருந்தார். அவர் கூறியது போலவே தற்போது நடந்து உள்ளது.
அதோடு தற்போது, வங்கதேச ராணுவம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்காது. இந்தியாவைச் சுற்றி டீப் ஸ்டேட் பொறி அமைத்து வருகிறது. அடுத்த சிக்கல் இந்தியாவிற்குத்தான்.
வரும் நாட்களில் இந்தியா கவனமாக இருக்கும். டீப் ஸ்டேட் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடந்தது போல இந்தியாவிலும்
அமெரிக்காவின் கைங்கரியமான் டீப் ஸ்டேட் உலக நாடுகளில் பல இடங்களில் ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. அதன் அடுத்த இலக்கு நேபாளம் மற்றும் இந்தியா. நேபாளம் மற்றும் இந்தியா முழுவதும் பங்களாதேஷ் மாணவர் போராட்டங்கள் போன்ற போராட்டங்கள் நடத்தப்படலாம். தற்போது மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இந்த குழு உள்ளது. இவர்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்புவார்கள்.
சிஐஏ, மொசாத், ஐஎஸ்ஐ இணைந்து வங்கதேசத்தை வீழ்த்தியதை நான் சரியாக கணித்தேன. அதன்படியே இப்போது இந்தியாவிற்கும் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறி உள்ளார் ஜோசியர் பிரஷாந்த் கினி.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
