Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ சைக்கிள் நிறுவனம் புதிய ஆன்லைன் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது!..

On March 31, 2017
tuuj_3148976f
Share
tuuj_3148976f முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ சைக்கிள் நிறுவனம் புதிய ஆன்லைன் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. `புரூக்ஸ்’ என்கிற பெயரிலான இந்த சைக்கிள்களை ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எல். ராம்குமார் தெரிவித்தார். இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, இந்தியாவில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் சைக்கிள்களை விற்பனை செய்யும் முயற்சியை தொடங்கியுள்ளோம். brookscycle.com என்கிற இணைய தளத்தில் விற்பனையாகும். மேலும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலமும் விற்பனை செய்யப்படும். ஆன்லைன் விற்பனையாக இருந்தாலும் இந்தியா முழுவதும் இதற்காக வாடிக்கையாளர் சேவை கிடைக்கும். சைக்கிள் டெலிவரி மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவைக்காக ஜீவெஸ் கன்ஸ்யூமர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிராண்டுக்கான வடி வமைப்பு மற்றும் உதிரிபாகங் களுக்கு என்று தனி பிரிவு உரு வாக்கப்பட்டுள்ளது என்றார். தற் போது 9 மாடல்களின் இந்த சைக்கிள்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.5,299 முதல் ரூ.10,625 வரையாகும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.