Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள்....

On June 3, 2017
karunanidhi_long_1_12420
Share
karunanidhi_long_1_12420 இன்று, 94 வது பிறந்த நாள் கொண்டாடும் திமுக தலைவர் கணாநிதிக்கு கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அவரது மனைவி துர்கா சென்றார். கருணாநிதி பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரது கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருவாரூரில் திமுக பிரமுகர் ஒருவர் தான் நடத்தும் ஓட்டலில் இன்று இலவச உணவு வழங்கினார். ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கினார். கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை ஒய்எம்சிஏ,. மைதானத்தில் விழா நடக்கிறது. நம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் திமுக தலைவர் கருணாநிதி ஆரோக்கியமும், நீண்ட ஆயுளை பெறவும் வாழ்த்துவதாக கூறியுள்ளார். மேலும் துணை ஜனாதிபதி அன்சாரி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் ஆங்கங்கே திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி சிறப்பித்து கொண்டிருகின்றனர்...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.