Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முதுகுவலிக்கு குட் பை சொல்லணுமா? இதை படியுங்க!

On August 1, 2017
vali
Share
vali 1. சிறிது உலர்ந்த இஞ்சி பொடியுடன் இரண்டு கருப்பு மிளகு, தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும். 2. 5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் 10 நிமிடம் தேய்த்தால் முதுகு வலி குறையும். 3. வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும். 4. வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குறையும். 5. முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும். 6. 3 கிராம் வெட்டிவேரின் புல்லை எடுத்து 2 கிராம் கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி குறையும். சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.