Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முதல்வர் ஆய்வு செய்தபிறகும் வராத மின்சாரம்! ஆர்.கே. நகர் பகுதிமக்கள் தவிப்பு

On November 3, 2017
b37d8229-38e4-4007-9db4-e41fc12ef65a
Share
b37d8229-38e4-4007-9db4-e41fc12ef65a முதல்வர் ஆய்வு செய்த பிறகும் ஆர்.கே. நகர் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, ஐ ஓ சி தமிழன் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் வடியாமலும் காலைமுதல் மின்சாரமும் இல்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். சென்னை நகரின்  மையபகுதியான ஆர்.கே. நகரின் தண்டையார் பேட்டை ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள பகுதி இது. இந்த இடத்தில் தொடர் மழை காரணமாக மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக தரைத்தளங்களில் வசிப்பவர்கள் மாடிகளுக்கு குடிபெயர்ந்தனர். அத்யாவசியப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஆர்.கே. நகர் பகுதி மக்கள் கூறுகிறார்கள். 201711031050172392_3_egmore._L_styvpf  ,  , ஆர்.கே.நகர், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பிற்பகலில் முதல்வர் பழனிசாமி, பொதுமக்களை நேரில் சந்தித்தார். முதல்வர் வந்து  சென்ற பிறகும் ஆர்.கே. நகரின் தண்டையார் பேட்டை, ஐ ஓ சி தமிழன் நகர், பழைய வண்ணாரப்பேட்டை  உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமலும் காலை முதல் மின்சாரமும் இல்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாத சூழலில், வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மழையால் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளன

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.