Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் கருணாஸ்க்கு ஜாமீன்..!

On September 28, 2018
51634
Share

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்க்கு எழுப்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற போலீசாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் கருணாஸ் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கருணாஸ்க்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை. அந்த மனு மீதான விசாரணை முடிந்த பிறகு தான், கருணாஸ் சிறையில் இருந்து வெளிவருவாரா இல்லையா என்பது தெரியவரும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.