Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முண்டாசுப்பட்டி' ராம் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை தயாரிக்கிறது 'ஆக்சஸ் பிலிம் பேக்டரி'

On September 26, 2016
maxresdefault-3
Share
maxresdefault-3
'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தில் தன்னுடைய  யதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களின் அமோக பாராட்டுகளையும்  பெற்றவர்   நடிகர் - தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்...இதுவரை எவரும் கண்டிராத கதை களத்தை 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வழங்கிய பெருமை இயக்குனர் ராமிற்கு உண்டு  என்று சொன்னால் அது மிகையாகாது. ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்ற இந்த இருவர் வெற்றி கூட்டணி, தற்போது  'ஆக்சஸ் பிலிம் பேக்டரி' சார்பில் தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிக்கும் பெயரிடப்படாத அதிரடி படத்திற்காக  இணைந்திருக்கிறது. திரையுலகின் வர்த்தக களத்தில் தரமான திரைப்படங்களை கொண்டு கால் பதித்து வருகிறது  'ஆக்சஸ் பிலிம் பேக்டரி'  என்பதை இந்த படம் மூலம் உறுதியாக  சொல்லலாம்.
"எப்போதுமே எனக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே நல்லதொரு நட்புறவு நீடித்து வருகிறது. தன்னுடைய  நூறு சதவீத ஒத்துழைப்பையும் இயக்குனருக்காக வழங்கும் ஒரு நடிகர் விஷ்ணு விஷால்....அவருடன் இந்த படத்திற்காக மீண்டும் ஒரு முறை இணைந்திருப்பது  எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.....பொதுவாகவே ஒவ்வொரு நடிகரின் திரையுலக வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு திரைப்படம் அவர்களுக்கு திருப்பு முனையாக அமையும்... அந்த வகையில்  இந்த அதிரடி திரைப்படமானது  விஷ்ணு விஷாலின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக இருக்கும்..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ராம்.
"ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுப்பவர் விஷ்ணு விஷால்.... தொடர்ந்து நான்கு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அவருக்கு இந்த கதாபாத்திரம் கன கச்சிதமாக பொருந்தும். அவருடைய 'முண்டாசுப்பட்டி' படத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட கதை களத்தில் உருவாகி வரும் இந்த அதிரடி திரைப்படமானது நிச்சயமாக விஷ்ணு விஷாலை வேறொரு பரிமாணத்தில் பிரதிபலிக்கும்...' என்று உற்சாகத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளர் டில்லி பாபு  ('ஆக்சஸ் பிலிம் பேக்டரி' ).

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.