மீண்டும் வருகிறான் சுமார் மூஞ்சி குமாரு!

 ,
சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான காமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ஆக பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.
இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2 )தங்களது அடுத்த படமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம் இப்போது வரை சோசியல் மீடியாவிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இப்போது இதே போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த ‘ஜுங்கா’ மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படத்திற்கான 30-நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல்படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2)பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது. ‘வனமகன்’ படத்தின் மூலம்ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகஅறிமுகமான சாயிஷா சாய்கல்‘ஜுங்கா’ படத்தின் நாயகியாகஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாடல்களையும், பிண்ணனி இசையையும் ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்காக உருவாக்கித் தந்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ளது ‘ஜுங்கா’ திரைப்படம். இப்படத்தை விஜய்சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால்,படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்துவிட்டது. படத்தின் பூஜை சமயத்திலேயே அப்படத்தின் வியாபாரங்கள் தொடங்குவது இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே இவ்வாறு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
 ,
ஏ அன்ட் பி குரூப்ஸ் இப்படத்தின் உரிமையை மிகப்பெரியவிலை கொடுத்து வாங்கியுள்ளது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகி பாபு உட்பட பலநட்சத்திரங்கள் ‘ஜுங்கா’ படத்தில்நடிக்கிறார்கள். இவர்களின் கூட்டணியோடு விஜய்சேதுபதியின் ‘கல கல’ காமெடி எபிசோடுகளைப்பார்க்க இப்போது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பிலிருக்கிறார்கள்.

 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.