Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் ஒரு காமெடி கலந்த திரில்லர் படத்தில் நடிக்கும் 'டார்லிங் 2' நாயகன்...

On June 3, 2017
rameesraja
Share
rameesraja ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் மூலம் "டார்லிங்-2" படத்தை தாயரித்து கதாநாயனாக தமிழ்த்திரையுலகிர்க்கு அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இப்படத்தின் மூலம் சதீஷ் சந்திரசேகரை தமிழ்த்திரையுலகில் இயக்குனராக அறிமுகம் செய்துள்ளார். ஹாரர் படமாக உருவாகிய இப்படத்தில் இவருடன் இணைந்து கலையரசன், முனீஸ், காளிவெங்கட், மெட்ராஸ் ஜானி, அர்ஜுனன் மற்றும் புதுமுக கதாநாயகி மாயவும் நடித்திருந்தார். இந்த "டார்லிங் -2" படத்திலேயே ரமீஸ்ராஜா அவர்கள் பயந்த சுபாவமும், முரட்டுகுனம்மும் கொண்ட இருவேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தை "ஸ்டுடியோ க்ரீன்" நிறுவனர் ஞானவேல் ராஜா வெளியிட்டார். மேலும் இப்படத்தின் கதாநாயகன் ரமீஸ்ராஜாவிற்கு இப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் உதவியாளர் விஜயபாலஜியின் இயக்கத்தில், உருவாகும் "விதி-மதி உல்ட்டா" படத்தினை தயாரித்து கதாநாயனாக நடித்தும் வருகிறார் ரமீஸ்ராஜா. இப்படத்திலும் ஒரு புதிய இயக்குனரை அறிமகம் படுத்துகிறார் ரமீஸ்ராஜா. இதில் இவருடன் இணைந்து டானியல் பாலாஜி,கருணாகரன், சென்ட்ராயன், சித்ராலட்சுமணன்,ஞானசம்பத், ஆகியோருடன் ஜனனி ஐய்யர் இப்படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷும் மற்றொரு பாடலை கானாபாலாவும், சித்ஸ்ரீராம் மற்றும் சின்மயி வேறொரு பாடலையும் பாடியுள்ளனர். மேலும் இப்படத்தில் ஒரு கொடூரமான தாதாவிடம் சிக்கிக்கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு மிடில்கிளாஸில் வாழும் பையன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை. இக்கதையை காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் மிடில்கிளாஸ் பையனாக ரமீஸ்ராஜா நடித்திருக்கிறார். ரமீஸ்ராஜா கதாநாயனாக நடிக்கும் 3வது படம் மர்டர் மிஸ்ட்ரி கதையமைப்பு கொண்ட படமாக உருவாகிறது. இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகையர்கள் இவருடன் பணியாற்ற உள்ளனர். இப்படத்தின் டைட்டிலும், முதல்ப்பார்வை போஸ்டரும், விரைவில் அறிவிக்கப்படும் என கூறுகிறார் வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகன் ரமீஸ் ராஜா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.