மீண்டும் உருவாகிய சரத்குமார்-நெப்போலியன் கூட்டணி...

சரத்குமார் தற்போது கதா நாயகனாக நடிக்கும் படம் 'சென்னையில் ஒரு நாள் -2'. இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் தயாரிக்க அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் படக்குழுவினர் இப்படத்திற்கு ‘சென்னையில் ஒரு நாள் -2’ என்று பெயரிட்டுள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
கலக்கலான காமெடியுடன் மாபெரும் வெற்றி பெற்ற தென்காசிபட்டினம் என்ற திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் நெப்போலியன் இனைந்து நடித்தார்கள். பின்னர் இருவரும் இனைந்து நடிக்க தக்க சந்தர்ப்பம் கிடைக்கப்பெறவில்லை. தற்போது நெப்போலியன் ‘சென்னையில் ஒரு நாள் -2’ சரத்குமாருடன் இனைந்து நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி சரத்குமார் மற்றும் சுகாசினி இதுவரை இதுவரை இனைந்து நடிக்காத நிலையில் இருவரும் இப்படத்தில் இனைந்து நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு முற்றிலும் முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்திரைப்படத்தை ராம் மோகன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஜெ.பி.ஆர் இயக்குகிறார். படத்தின் ஒளிப்பட்திவை டீபை மேற்கொள்ள, ராண் இசையமைத்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
