Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மிஷ்கின் எழுதிய சிறந்த கதை .

On January 23, 2018
ram and miskin
Share
ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவரக்கத்தி’. இயக்குநர்கள் ராம், மிஷ்கின், பூர்ணா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘பிசாசு’ படத்திற்கு இசையமைத்த அரோல் கரோலி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் கதையை எழுதியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். ram and miskin இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ராம், “இந்த உலகில் குடிக்க, அன்பைப் பற்றி பேச, படிக்க, கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால், அது மிஷ்கினின் அலுவலகம்தான். எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே… அதை படிப்பாரா என்று கேட்பார்கள்? அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ, அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார். என்னுடைய படத்திலும், மிஷ்கின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னைப் பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த கதை ‘சவரக்கத்தி’ தான். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.