Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்..!

On January 27, 2019
WhatsApp-Image-2019-01-13-at-5.50.34-PM-9
Share
ஜி.வி.பிரகாஷ் தனித்துவமான இசையுடன் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்குவதில் எப்போதும் ஒரு முன்னோடியாக விளங்குகிறார். குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், அவர் எல்லா இசை வகைகளிலும் சூப்பர் ஹிட் பாடல்களை அதிகம் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். இயற்கையாகவே, வெற்றி நடைபோடும் இசையமைப்பாளர் மற்றும் கதைகளின் நாயகனாக நடிக்கும் நடிகர் என இரட்டை அவதாரங்களும் அவருக்கு இடைவிடாத பாராட்டுக்களை குவித்து வருகின்றது.
இந்த லீக்கில் சமீபத்தில் சேர்ந்திருப்பது வாட்ச்மேன் படத்தின் 'டோட்டோ' பாடல். இது குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜிபி பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது. கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது. இது வெறுமனே யூடியூப் பார்வைகளை மற்றும் பெற்றிருக்காமல், பட ரிலீஸின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, "இந்த வெற்றி எங்கள்  கணிப்புக்கு அப்பாற்பட்டது. படத்தின் சில காட்சிகளையும் சேர்த்து, விளம்பர வீடியோவை உருவாகியுள்ள இயக்குனர் விஜய்யின் படைப்பு சாராம்சத்தை தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட பாடலின் வெற்றி மட்டுமல்ல, பார்வையாளர்கள் இந்த ட்ரெண்டை ஏற்றுக் கொண்டு வரவேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகளும், சஞ்சனா கல்மன்ஜேவுடன் இணைந்து அவர் பாடிய விதமும் பாடலை இன்னும் சிறப்பாக்கி இருப்பதாக நான் கூறுவேன். அருண்ராஜாவின் குரல் ஏற்கனவே ஒரு பிராண்ட் ஆகியிருக்கிறது, இது பாடலுக்கு ஒரு பெரிய மைலேஜ் சேர்த்தது என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ருவல் டவுசான் வரிண்டனியின் அற்புதமான நடனம் பாடலுக்கு மகுடம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது. உண்மையில், சாயீஷா சைகல் போன்ற நாட்டின் மிகவும் திறமையான ஒரு நடனக் கலைஞருடன் இணைந்து நடனமாடியது மிகவும் சவாலான தருணமாக இருந்தது" என்றார்.
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்த படத்தை தயாரிக்கிறார். அவரது படங்களின் வரிசையானது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தாராளமாக உருவாக்கியுள்ள நிலையில், இப்போது 'வாட்ச்மேன்' படமும் சினிமா ரசிகர்களின் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.