Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மருத்துவ முத்தம் கொடுத்த ஆரவ் பட்டத்தை தட்டிச்சென்றார்!

On October 1, 2017
aarav-bigg-boss-winner
Share
aarav-bigg-boss-winner சமூக வலைதளங்களாலும் இளைஞர்களாலும் வெகுவாக கொண்டாடப்பட்ட, பிரபல தொலைக்காட்சியில் 100 நாட்கள் நடைபெற்று டி.ஆர்.பி-யை எகிற வைத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாவது இடத்தை கவிஞர் சினேகன் தட்டிச்சென்றார். பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி . நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர். 201710010117439770_2_biggbosss._L_styvpf இந்த நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி ஆகியோர் இடைப்போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி நேற்றுடன் (30-ம் தேதி) முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாம் இடத்தை கவிஞர் சினேகனும், மூன்றாம் இடத்தை நடிகர் ஹரிஷ் கல்யாணும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆரவிற்கு வெற்றிக்கோப்பையும், 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 76,76,53,065 பேர் வாக்களித்துள்ளனர் என நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்தார். வெற்றிக்கு பின்னர் பேசிய ஆரவ் இந்த பட்டத்தை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தனது ஆசிரியர்,பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். bigg-boss-oviya-main ஆரவ் பட்டத்தை வென்றிருந்தாலும் இதன் உண்மையான வின்னர் ஓவியா தான் என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியின் போது ஓவியா கலந்துக்கொண்டது அவரது ஓவியா ஆர்மி ரசிகர்களுக்கிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓவியா-வால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மட்ட ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.