மரண மாஸ் பெயருடன் 'தலைவர் 167' - பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட்ட படக்குழு..!

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
பேட்ட படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அவர் ரஜினியுடன் ஜோடி சேர்கிறார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்ட படத்தின் பாடல்கள் ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ரஜினி போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படம் லீக்காகி வைரலானது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு "தர்பார்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 ,
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
