மது அருந்த நண்பர்கள் பணம் கொடுக்காததால் கோபத்தில் 3 லாரிகளை கொளுத்திவர் கைது!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த சர்ஜாபூரைச் சேர்ந்தவர் இம்தியாஸ். அவர் தனது நண்பர்களிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அப்போது ஒரு நண்பர் பணம் தராததால், வேறொரு நண்பரைச் சந்திக்க சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லாததால் மிகவும் கோபமடைந்துள்ளார். உடனே அங்கே நிறுத்தப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களுக்கு தீவைத்துள்ளார்.
அப்போது ஓட்டுநரும், கிளீநரும் உணவருந்த சென்றிருந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் வர முயற்சித்தனர். இருப்பினும் 3 லாரிகளில் இருந்த பொருட்களும் எரிந்தன. இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீசார், இம்தியாசை கைது செய்தனர். அதில் அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
