Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மதுரை மாணவனை காவு வாங்கிய திமிங்கலம்!

On August 31, 2017
vik
Share
vik உயிரை பறிக்கும் ப்ளுவேல் கேம் மதுரையையும் தாக்கியுள்ளது. blue 2 மதுரையில் விளாச்சேரியைச் சேர்ந்த வனிதா, ஜெயமணி என்பவரின் மகன் விக்னேஷ். இவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் தற்போது உயிரை குடித்துவரும் 'ப்ளுவேல் கேம்' விளையாடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது மாணவர் விக்னேஷின் கையில் ப்ளுவேல் கேம் அடையாளம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயிரைக் கொல்லும் ப்ளுவேல் கேமை மாணவர் விக்னேஷ் விளையாடிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னையில் ப்ளுவேல் கேம் விளையாடிய மாணவி ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.