'மதுரவீரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

தமிழ் திரையுலகில் 'சகாப்தம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சண்முகபாண்டியன். இவர் 'சகாப்தம்' படத்தைத் தொடர்ந்து பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவகின்ற 'மதுர வீரன்' படத்தில் நடித்துகொண்டிருகிறார். 'மதுரவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.
இப்படத்தில் சண்முகபாண்டியனோடு சமுத்திரக்கனி, பால சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ப்ரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை கவனித்து வருகிறார்.
விஜி சுப்பிரமணியம் மற்றும் பி.ஜி.முத்தையா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இறுதிக்கட்டப் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
